முக்கிய செய்திகள்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - ராணுவ வீரர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

காஷ்மீரின் எல்லை பகுதியான பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

பட்காம் மாவட்டத்தின் எல்லை பகுதியில் ராணுவ முகாமை நோக்கி திடீரென தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், சபீர் அகமது என்ற ராணுவ இருப்பிட அதிகாரி பலியானார். உடன் சுதாரித்துக்கொண்ட இந்திய ராணுவப் படையினர், எதிர்த்தாக்குதல் நடத்தினர். இருப்பினும் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 வீரர்கள், ஸ்ரீநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்