முக்கிய செய்திகள்:
தமிழக காவல்துறையில், 172 பேருக்கு, ஒரே சமயத்தில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆணையராக பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

தமிழக காவல்துறையில், ஆய்வாளராக பதவி வகித்துவந்த 172 பேருக்கு, ஒரே சமயத்தில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆணையராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காவல்துறை ஆய்வாளர்களாக பணியாற்றிவரும் 146 பேர், காவல்துறை துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர்கள் மேலும் 26 பேருக்கு, உதவி ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்