முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் தங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எழும்பூரில் உள்ள சென்னைப் பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பில் 2 வாரம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதேசமயம் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த புதிய மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அபராதம் செலுத்தும் சமரச மனுவானது வருமான வரித்துறையின் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே, ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், விசாரணை முடிவடையாததால் 2 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்திற்கு எழும்பூர் நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்