முக்கிய செய்திகள்:
அசாமில் எரிவாயு பைப்லைன் வெடித்து 4 பேர் சாவு

அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு பைப்லைன் வெடித்து தீப்பிடித்ததில் 4 பேர் பலியாகினர்.

அசாம் கேஸ் கம்பெனி சார்பில் சிங்லிஜாபன் தேயிலைத் தோட்டம் அருகில் பதிக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு பைப்லைன் இன்று அதிக அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது. இதில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.

ஒரு வீட்டில் இருந்த பசந்தா சர்மா (35), அவரது மனைவி பராஸ் சர்மா (26) ஆகியோர் இறந்தனர். அவர்களின் குழந்தைகள் ஆகாஷ்(7), ஹேமந்தா (9) ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் திப்ருகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு வீட்டில் மைக்கேல் சாபர் (30) மற்றும் அவரது மனைவி ஜோதி (23) ஆகியோர் பலியானார்கள். மற்ற வீடுகளில் துர்கா பரைக் (42), அவரது மகள் மேனகா (18), மனைவி மரினா (35), சூர்ய சாகு (55), ரமேஷ் சாகு ஆகியோரும் பலத்த தீக்காயமடைந்தனர். ஏராளமான கால்நடைகளும் கருகின.

காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்