முக்கிய செய்திகள்:
மதிமுகவினருக்கு வைகோ அறிவுரை

கடினமாக உழைத்தால் வெற்றிதேடி வரும் என்று நெல்லையில் மதிமுக தொண்டர்களுக்கு வைகோ அறிவுரை கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதில் ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

இதையடுத்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ கழக ஆய்வு களம் என்ற பெயரில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேச முடிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் தொடக்க கூட்டம் இன்று நெல்லை சந்திப்பில் உள்ள புறநகர் மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு ஒன்றியம்வாரியாக நிர்வாகிகள்தொண்டர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பணத்தால் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள். நாம் கடினமாக உழைத்தால் வெற்றி நம்மை தேடி நிச்சயம் வரும். அதுவரை கவலைப்படாமல் இருங்கள் என்றார்.பின்னர் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்த வைகோ தனிப்பட்ட முறையில்உங்களுக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், யார் மீதாவது புகார் கூற வேண்டும் என்றாலும் என்னிடம் கூறுங்கள் என்று கூறினார்.

வருகிற 5–ந்தேதி விருதுநகரில், 8–ந்தேதி காஞ்சிபுரம், 19–ந்தேதி நாமக்கல்லிலும் வைகோ தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். இன்று மாலை மாநகர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வைகோ பேசுகிறார்.

 

மேலும் செய்திகள்