முக்கிய செய்திகள்:
சென்னை ஓபன் செஸ் தொடர் இந்திய வீரர்கள் முன்னிலை.
சென்னை: சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் சென்னை ஓபன் செஸ் தொடரின் நான்கு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் ரத்னாகரன், ஸ்வப்னில் தோபடே ஆகியோர் தலா நான்கு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர், இதில் ரத்னாகரன், சக இந்திய வீரரும் புதிய கிராண்ட் மாஸ்டருமான கார்த்திகேயன் முரளியைத் தோற்கடித்தார், மற்றொரு இந்திய வீரர் ஸ்வப்னில் தோபடே சக வீரர் அபிஷேக் கேல்கரை வீழ்த்தினார், மற்ற ஆட்டங்களில் ரஷியாவின் பொப்பொவ் இவான், பிரான்ஸின் லாசரே விளாதிமிரைத் தோற்கடித்தார். இந்தியாவின் ராம்நாத் புவனேஷ், பெரு நாட்டின் க்ரூஸ் கிறிஸ்தியான் ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது, நான்கு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் நாம்நாத் புவனேஷ், கிரூஸ் கிறிஸ்தியான், இவான் பொபாவ், லாசரே விளாதிமிர், வியட்நாமின் ங்குவயன் வான் ஹியூ ஆகியோர், 3.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர், பி பிரிவில், 5-ஆவது சுற்றின் முடிவில் ராஜு, நீல் ஃபிராங்க்ளின், அபிர்சின்ஹா, அர்ஜுன் கல்யாண், அனில்குமார், மணிகண்டன், டோஷாலி, சாகு ராஜேஷ்குமார் ஆகியோர் 4.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்