முக்கிய செய்திகள்:
சர்வதேச கிரிக்கெட் தர வரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறினார், விராட் கோலி.
துபை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி, 15-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார், மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலி 169 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 54 ரன்களும் அடித்ததன் மூலம், தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி உள்ளார், மற்ற இந்திய பேட்ஸ்மேன்களில், சேதஸ்வர் புஜாரா 19-ஆவது இடத்திலும், முரளி விஜய் 20-ஆவது இடத்திலும் உள்ளனர். ரஹானே 26-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
மேலும் செய்திகள்