முக்கிய செய்திகள்:
இடை நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆய்வுக்காக சென்னை வருகை.
துபை: முறைகேடாகப் பந்து வீசியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான சயீத் அஜ்மல், முகமது ஹஃபீஸ் ஆகிய இருவரும், சென்னையில் உள்ள ஆய்வு மையத்தில் தங்கள் பந்துவீச்சை சரிசெய்ய உள்ளனர், இதற்காக இன்னும் ஓரிரு நாள்களில் அவர்கள் சென்னை வருவர், இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி கூறுகையில், சயீத், அஜ்மல் ஆகிய இருவரும் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட பிரிஸ்பேன், லஃப்பரோவில் உள்ள சோதனை மையங்களுக்கு செல்வதைக் காட்டிலும், சென்னை செல்வதையே விரும்புகின்றனர் அவர்கள் சென்னை செல்வதற்கான விஸாவை, இந்திய தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கி விட்டது என்றார். ஹஃபீஸ் கடந்த மாதமும், அஜ்மல் செப்டம்பர் மாதமும் சந்தேகப் பந்துவீச்சு நடவடிக்கையில் சிக்கி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகள்