முக்கிய செய்திகள்:
சென்னை ஓபன் செஸ் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடக்கம்.
சென்னை: தமிழக செஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் சென்னை ஓபன் செஸ் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது, சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் இந்தத் தொடரில் அனைத்து செஸ் வீரர்களும் பங்கேற்கும் வகையில் "ஏ', "பி', "சி' என மூன்று பிரிவில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன, சர்வதேச தரவரிசை 1900-க்கும் மேல் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்கும், "ஏ' பிரிவு போட்டிக்கு மொத்தம் ரூ. 14 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ. 2 லட்சம் கிடைக்கும், குரூப் "பி' பிரிவில் செஸ் விளையாடத் தெரிந்த யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்த பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். சர்வதேச தரவரிசை 1599-க்கும் கீழ் உள்ளவர்கள் பங்கேற்கும் "சி' பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ 25,000 கிடைக்கும், இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் மேலும் விவரங்களுக்கு 044 25366464 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகள்