முக்கிய செய்திகள்:
அம்பத்தூர், பூந்தமல்லி வட்டங்களை இரண்டாகப் பிரித்து ஆவடி வட்டம் தொடங்க பொது மக்கள் வேண்டுகோள்.
சென்னை: அம்பத்தூர், பூந்தமல்லி வட்டங்களை இரண்டாகப் பிரித்து ஆவடி வட்டம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் சைதாப்பேட்டை வட்டம் மிகப் பெரிய வட்டமாக இருந்தது. இந்தநிலையில், சைதாப்பேட்டையில் இருந்து அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1997-ஆம் ஆண்டில் அம்பத்தூர் வட்டம் உதயமானது. பின்னர் அம்பத்தூர் வட்டத்தில் இருந்து 2010-ஆம் ஆண்டில் மாதவரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மாதவரம் வட்டம் உருவானது, சென்னையின் முக்கிய புறநகர்ப் பகுதியான ஆவடி பகுதியில் உள்ள மக்கள் வருவாய்த் துறை சான்றிதழ்களைப் பெற நீண்ட தொலைவு செல்லவும், நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் ஆவடியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்தால் பிரச்னைகள் தீரும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
மேலும் செய்திகள்