முக்கிய செய்திகள்:
வைகுண்ட ஏகாதசி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு ஏற்ப்பாடு.
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி, வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவத் திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கப்படுகிறது, வைணவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது, இதையொட்டி, வைணவத் திருத்தலங்களில் நள்ளிரவு முதலே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பரமபத வாசல் திறக்கப்படும், இதற்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவக் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, இந்த ஆண்டு, புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி வருவதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் செய்திகள்