முக்கிய செய்திகள்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மனு மீதான துவங்கியது.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை துவங்கி, வார விடுமுறை நாட்கள் தவிர நாள்தோறும் நடைபெறும் என கூறப்படுகிறது, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நேற்று நியமிக்கப்பட்டார் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது, அதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது இதனிடையே, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்குமாறும், நாள்தோறும் விசாரணை நடத்த தனி நீதிபதியை நியமிக்குமாறும் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு டிசம்பர் 18-ஆம் தேதி உத்தரவிட்டது, இந்நிலையில், குளிர்கால விடுமுறை முடிந்து கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) மீண்டும் திறக்கப்படுகிறது, அப்போது, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக நீதிபதி சி.ஆர்.குமாரசாமியை நியமித்து, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எச்.வகேலா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்