முக்கிய செய்திகள்:
வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளை இணையத்தளம் மூலம் புதுப்பிக்கலாம், உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ்.
சென்னை: வெள்ளை நிறமுடைய எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகவரி ஆதாரத்திற்காக வழங்கப்படும் மஞ்சள் நிறமுடைய தக்கல் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய “N“ குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள www.consumer.tn.gov.in என்ற இணைய தளத்தில் வசதி செய்து தரப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்துள்ளார், குடும்ப அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணி முன்னேற்றம் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை, சேப்பாக்கம் கூட்டரங்கில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது, அப்போது பேசிய அமைச்சர், வெள்ளை நிறமுடைய எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகவரி ஆதாரத்திற்காக வழங்கப்படும் மஞ்சள் நிறமுடைய தக்கல் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய “N“ குடும்ப அட்டைகளை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் இவ்வசதி 31.3.2015 வரை செயல்பாட்டில் இருக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இணைய தளத்தில் குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ள இயலாத வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்களில் அவர்களுடைய குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்