முக்கிய செய்திகள்:
ராஜபட்சவின் வஞ்சக வலையில் ஈழத் தமிழர்கள் சிக்க மாட்டார்கள், பாமக நிறுவனர் ராமதாஸ்.
சென்னை: இலங்கை அதிபர் ராஜபட்சவின் வஞ்சக வலையில் ஈழத் தமிழர்கள் ஒருபோதும் சிக்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார், இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரசாரம் செய்த ராஜபட்ச, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள் மறந்துவிட வேண்டும். இலங்கையின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார், இலங்கை அதிபர் பதவியை மூன்றாம் முறையாக கைப்பற்ற நினைக்கும் ராஜபட்சவின் அந்தப் பேச்சு, அவரது ஆணவத்தையும், தமிழர்களை மிரட்டும் மனப்பான்மையையும் காட்டுவதாகும் துரோகங்களையும், சதிகளையும் மன்னித்து, மறப்பது தான் தமிழர்களின் குணம் ஆகும் ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ராஜபட்ச செய்த கொடுமைகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை, இந்த முறை தமிழர்களை நயவஞ்சக வலையில் வீழ்த்தி வெற்றி பெறத் துடிக்கிறார் இந்த வலையில் ஈழத்தமிழர்கள் என்றும் வீழ மாட்டார்கள் என்றார் அவர்.
மேலும் செய்திகள்