முக்கிய செய்திகள்:
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மணிமுத்தாறு அணை, விவசாயிகள் மகிழ்ச்சி.
திருநெல்வேலி: வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்ததையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணிமுத்தாறு அணை சனிக்கிழமை நிரம்பியது, பாபநாசம், சேர்வலாறு அணைகளைத் தொடர்ந்து மணிமுத்தாறு அணையும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தாமிரவருணியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வடகிழக்குப் பருவமழை நிகழ் பருவத்தில் வழக்கத்தை விட 161.54 சதவீதம் கூடுதலாகப் பெய்ததால், திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை கடந்த 2-ஆம் தேதி நிரம்பியது 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை கடந்த மாதம் 25-இல் நிரம்பியது, 118 அடி கொள்ளளவு உள்ள மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் மாலை 4 மணி நிலவரப்படி 117.75 அடியாக இருந்தது. காலையில் அணைக்கு நொடிக்கு 3,800 கன அடி நீர்வரத்து இருந்தது மாலையில் நீர்வரத்து 2,600 ஆகக் குறைந்து காணப்பட்டது, அணையில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் முகாமிட்டு அணையின் நீர்வரத்தைக் கண்காணித்தனர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து, அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது பாபநாசம், சேர்வலாறு அணைகளைத் தொடர்ந்து மணிமுத்தாறு அணையும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்