முக்கிய செய்திகள்:
தேமுதிக 10–வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது கூட்டங்கள்

தே.மு.தி.க.வின் 10–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தே.மு.தி.க.வின் 10–ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வருகிற 14, 15 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். இந்த கூட்டம் அந்தந்த மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களில் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் முக்கிய நிர்வாகிகளின் பெயர் விவரம் வருமாறு:–

14–ந் தேதி நடைபெறும் கூட்டங்களில் தே.மு.தி.க பொருளாளர் இளங்கோ வேலூர் மத்திய மாவட்ட பொதுக்கூட்டத்திலும், தே.மு.தி.க. தலைமைக் கழக செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ நெல்லை மாநகர் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்கள். மதுரை மாநகரில் தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ. பேசுகிறார்.

தென் சென்னை – தே.மு.தி.க. துணை செயலாளர் முருகேசன், திருச்சி தெற்கு – துணை செயலாளர் ஆர் சமாநாத், கோவை மாநகர் – துணை செயலாளர் ஜாகீர் உசேன், திருப்பூர் வடக்கு – எம்.ஆர்.பன்னீர் செல்வம், சிவகங்கை – பி.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை தெற்கு – எம்.சி.சேகர், திருவள்ளூர் மேற்கு – பி.ஆர். மனோகர் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி மேற்கு – கே.ஆர். வீரப்பன், கடலூர் வடக்கு – கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., ராமநாதபுரம் – சையது காஜா செரிப், தஞ்சை தெற்கு – சிவகாமி முத்துக்குமார், நாகை வடக்கு – விஜயகுமார், தேனி – எஸ்.கணேசன், தர்மபுரி – வி.பி.ஈஸ்வரன், விருதுநகர் – சீனிவாச ராகவன்.

சேலம்மாநகர் – போராசிரியர் ரவீந்திரன், புதுக்கோட்டை – முருகநாதன், காஞ்சீபுரம் தெற்கு – சவுந்திர பாண்டியன், திருவாரூர் – பழனிவேல், தூத்துக்குடி வடக்கு – எஸ். சந்திரா, ஈரோடு வடக்கு – ஆனந்த பாபு, விழுப்புரம் – ராஜேந்திரநாத், திண்டுக்கல் கிழக்கு – ராமநாதன் கரூர்– முஜிபுர் ரகுமான். இவர்களுடன் பேசும் பேச்சாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

15–ந் தேதி சேலம் கிழக்கு, மதுரை வடக்கு, கன்னியாகுமரி கிழக்கு, காஞ்சீபுரம் வடக்கு, தஞ்சை வடக்கு, கடலூர் தெற்கு, ஈரோடு தெற்கு, திண்டுக்கல்மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, சென்னை மேற்கு, மத்திய சென்னை, நெல்லை மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, வேலூர் மேற்கு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக் கூட்டங்களிலும் ஏற்கனவே பேசி முக்கிய நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

 

மேலும் செய்திகள்