முக்கிய செய்திகள்:
முதல் வேட்பாளர் பட்டியலை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 35-வது வார்டு - டி.என்.பாலாஜி என்ற லட்சுமி நரசிம்மன். சென்னை மாநகராட்சி 166-வது வார்டு - வி.நீதி சேவியர். நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு பல்லாவரம் 2-வது வார்டு - ராம்குமார். மறைமலைநகர் 11 -வது வார்டு - ஏ.குணசேகரன். தாம்பரம் 33-வது வார்டு ஜெ.சாமுண்டீஸ்வரி. ஆவடி 33-வது வார்டு - எஸ்.தரணி.

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, உத்திரமேரூர் 13-வது வார்டு - பவுல்பேட்ரிக் பெஞ்சமின். அச்சிறுப்பாக்கம் 13-வது வார்டு - வி.கோகிலா பாலாஜி. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, காட்டாங்கொளத்தூர் 16-வது வார்டு - கே.எஸ்.கோசல்ராம். ஸ்ரீபெரும்புதூர் 10-வது வார்டு - ஏ.ஹரிகிருஷ்ணன், திருப்போரூர் 2-வது வார்டு - ஈ.ஸ்ரீதர், அச்சிறுப்பாக்கம் 15-வது வார்டு - வி.பார்த்திபன்.

மேலும் செய்திகள்