முக்கிய செய்திகள்:
கோர்ட்டில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு

நித்யானந்தா சாமியார் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அர்ஜூன் சம்பத் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து நித்யானந்தா மீது கோவை குற்றவியல் கோர்ட்டில் அர்ஜூன் சம்பத் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, செப்டம்பர் 3-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு சம்மன் அனுப்பியது.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். அதில், 2011-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கை 3 ஆண்டுகளுக்குபின் குற்றவியல் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, கோவை கோர்ட்டில் செப்டம்பர் 3-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்தும், மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அர்ஜூன் சம்பத்துக்கு நோட்டீசு அனுப்பியும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்