முக்கிய செய்திகள்:
ஜி.ராமகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜர்

வேலூரில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றிக் கொலைச் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனின் பேட்டி, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தியாக வெளியானது.

இதையடுத்து, அவர் மீது முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஜி.ராமகிருஷ்ணன் கோர்ட்டில் நேரில் ஆஜராகினார். பின்னர், இந்த வழக்கு அக்டோபர் 9–ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோர்ட்டு அறையில் இருந்து வெளியில் வந்த ஜி.ராமகிருஷ்ணன், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எங்கள் மீது இதுபோன்ற அவதூறு வழக்கு தொடர்வது வழக்கம்தான். எனவே, பொதுமக்கள் பிரச்சினைக்காக எங்கள் மீது தொடரப்படும் வழக்குகளை மார்க்சிஸ்ட் கட்சி சட்ட ரீதியாக சந்திக்கும்  என்று நிருபர்களிடம் கூறினார்.

 

மேலும் செய்திகள்