முக்கிய செய்திகள்:
திமுகவில் இருக்கும் இந்துக்கள் வெளியேற எச்.ராஜா வலியுறுத்தல்

அனைத்து மத பண்டிகைகளிலும் கலந்து கொள்வது, வாழ்த்து சொல்வது போன்ற நடைமுறைகளை அரசியல் கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் கட்சிகளில் இருக்கும் சம்பந்தப்பட்ட மதங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது.இந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர்.

இந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்று கூறப்பட்டது. இது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து இயக்கங்களும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–இந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது. இதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்