முக்கிய செய்திகள்:
ஆசிரியர் நாள் பெயர் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியராக பணியை தொடங்கி இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5–ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் ஆசிரியர் நாளையொட்டி வரும் 5–ந் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுடன் காணொலிக் கலந்தாய்வு முறையில் பிரதமர் மோடி கலைந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பிரதமர் ஒருவர் பள்ளி மாணவ–மாணவியருடன் கலந்துரையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் மத்திய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கதாகும். அதே நேரத்தில் ஆசிரியர் நாள் என்ற பெயரை குருஉத்சவ் என மத்திய அரசு மாற்றியிருப்பது சரியல்ல.

சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஆசிரியர் நாளை குருஉத்சவ் என்று பெயர் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்