முக்கிய செய்திகள்:
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈஸ்வரன் வாழ்த்து

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க. தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு தொடர்ந்து 7–வது முறையாக அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்து கட்சிப் பணி சிறப்பாக ஆற்றவும், இதன் மூலம் தமிழக மக்கள் வளம் பெறவும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்