முக்கிய செய்திகள்:
முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி மாலை

முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் 81– வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொது செயலாளர்கள் வி.பி.துரைசாமி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் பொன்முடி,தொழிலாளர் அணி செயலாளர் சிங்காரரத்தினசபாபதி, தலைமைநிலைய செயலாளர் துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், தா.மோ. அன்பரசன், சுதர்சனம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ப.ரங்கநாதன், பி.கே.சேகர் பாபு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம், கிரிராஜன், பல்லாவரம் நகர செயலாளர் கருணாநிதி படப்பை மனோகரன், பாலவாக்கம் விசுவநாதன், வி.பி.மணி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பூச்சி முருகன், ஏ.எம்.வி, பிரபாகர் ராஜா, சேப்பாக்கம் சிதம்பரம், பாண்டிபஜார் பாபாசுரேஷ், மின்கழக தொ.மு.ச. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்ராஜன், பகுதி செயலாளர்கள் ம.ப.அன்பு துரை, கே.கே.நகர் தனசேகரன், காமராஜ், ஏழுமலை, மதன்மோகன், ஜெ.கருணாநிதி, சைதை குணசேகரன், பிரசிடென்சி சதீஸ், புழல் நாராயணன், உமாபதி, மு.ராஜா, முத்து வேல், கோவிந்தராஜ், கே.கண்ணன், முருகேசன், சைதை கிருஷ்ணமூர்த்தி, தாயகம் கவி, நேருநகர் பாட்சா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்