முக்கிய செய்திகள்:
கல்வியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் பழனியப்பன்

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பாலபாரதி (மார்க்சிஸ்ட்) எழுந்து, கல்வியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:–

கல்வியியல் கல்லூரிகளுக்கு நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழு கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் ரூ.2500 ஆகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு ரூ 10 ஆயிரம் ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி கல்லூரிகளில் கட்டணம் ரூ. 41,500 ஆகவும், தரச்சான்று பெற்ற கல்லூரிகளில் கட்டணம் ரூ 46,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. பி.எட். படிப்பு 2 ஆண்டு ஆக அதிகரிக்கும் முடிவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அது ஆய்வில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்