முக்கிய செய்திகள்:
தமிழக முதல் அமைச்சருக்கு சரத்குமார் நன்றி

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் காமன் வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்த வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

இதையொட்டி முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமத்தவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் சாதனை படைத்த சதீஷ்குமாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதேபோல் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்