முக்கிய செய்திகள்:
சிவகங்கை மாவட்டத்தில் புதிய சிப்காட் : அமைச்சர் தகவல்

சட்டசபையில் இன்று அ.தி.மு.க. உறுப்பினர் குணசேகரன் கேள்வி நேரத்தின் போது சிவகங்கை மாவட்டத்தை தொழில் வளம் மிகுந்த மாவட்டமாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார்.

இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்து கூறியதாவது:–

ஏற்கனவே மானா மதுரையில் 492 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிப்காட் உள்ளது. இங்கு 78 தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் 17 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக சிப்காட் வளாகம் அமைக்க 2,700 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிலத்தை கையகப்படுத்தி தொழிற் சாலைகளை கொண்டு வர முதல்–அமைச்சர் அம்மா அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

எனவே வரும் காலத்தில் சிவகங்கை மாவட்டம் தொழில் வளம் மிகுந்த மாவட்டமாக மாறும்.

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு):– சிவகங்கை மாவட்டத்தில் எந்த இடத்தில் புதிதாக சிப்காட் வளாகம் அமைய உள்ளது.

அமைச்சர் தங்கமணி:– எந்த இடம் என்பதை முன் கூட்டியே சொல்ல இயலாது. நீங்கள் அந்த இடம் வேண்டும் என்பீர்கள். இன்னொரு உறுப்பினர் அந்த இடத்தில் அமைக்க வேண்டாம் என்பார். எனவே எந்த இடத்தில் சிப்காட் வருகிறது என்பதை இடத்தை தேர்வு செய்த பிறகுதான் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்