முக்கிய செய்திகள்:
நடராஜனுக்கு போலீஸ் காவல்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிலைகள் செய்து கொடுப்பது தொடர்பாக கராத்தே ஹூசைனிக் கும், சசிகலா கணவர் நடராஜனுக் கும் மோதல் ஏற்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹுசைனி கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றாலத்தில் பண்ணை வீட்டில் இருந்த நடராஜன், இளவழ கன் ஆகியோரை கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.

7-ம் தேதி சென்னை கொண்டுவரப் பட்ட இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீ ஸார் மனு செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சாந்தி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நடராஜன், இளவழ கன் ஆகியோரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் அனுமதி கொடுத் தார்.

இருவரையும் 14-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத் தில் மீண்டும் ஆஜர்படுத்த வேண் டும் என்று மாஜிஸ்திரேட் சாந்தி உத்தரவிட்டார். நடராஜன், இளவழ கன் ஆகியோர் தாக்கல் செய் துள்ள ஜாமீன் மனுவும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்