முக்கிய செய்திகள்:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே அவர்களுக்கும், சென்னை கட்டட விபத்தில் பலியானவர்களுக்கும் பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பேரைவையின் கூட்டத்தொடர் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. கடைசி நாளான ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி 2014-15ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான முதல் துணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதே நாள், மானிய கோரிக்கைக்கு நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது. துணை மானிய கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்