முக்கிய செய்திகள்:
நெல்லை மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் பாசன வசதிக்காக 4 அணைகளில் இருந்து இன்று தண்ணீர்திறந்து விட்ப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நெல்லை மாவட்டத்தில்உள்ள, கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகளில் இருந்து கார்பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் கருணாகரன் இன்று கடனாநதி நீர்த்தேக்கத்திலிருயது
தண்ணீரினை திறந்து வைத்தார். தொடர்ந்து கருப்பாநதி, ராமநதி, அடவிநயினார் கோவில் ஆகிய
நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீரை திறந்து வைத்த ஆட்சியர் கருணாகரன் கூறுகையில், தமிழக முதல்வர்நெல்லை மாவட்டம் மாவட்டம், அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள பாசன பரப்புகளுக்கு கார்பருவ சாகுபடிக்காக, கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் கோவில் மற்றும் ராமநதி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் 15.10.2014 வரை 105 நாட்களுக்கு தண்ணீர்திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், இன்று முதல் கடனாநதி நீர்த்தேக்கத்திலிருந்து, கடனாநதி பாசன திட்டத்தின் கீழ் உள்ள அரசபத்து, வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி, தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால்,
காக்கநல்லூர்கால் மற்றும் காங்கேயன்கால் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 31 கன அடியாக உள்ளது. இன்று அணையிலிருயது நொடிக்கு 10 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் கருப்பாநதி, அடவிநயினார் கோவில் மற்றும் ராமநதி ஆகிய நீர்த்தேக்களிலிருயது கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம், ராமநதி நீர்த்தேக்கத்தில் 70 அடியாகவும், கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் 45.04 அடியாகவும், அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் 58.50 அடியாகவும் உள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு இராமநதி நீர்த்தேக்கத்தில் 95.53 கன அடியாகவும், கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் 1 கன அடியாகவும், அடநவினார் கோவில் நீர்த்தேக்கத்தில் 2 கன அடியாகவும் உள்ளது. கார் பருவ சாகுபடிக்காக இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 10 கன அடி விதத்திலும்,
கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 5 கன அடி விதத்திலும், அடவிநயினார் நீர்த்தேக்கத்திலிருந்து 2 கன அடி விதத்திலும்தண்ணீர்திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 11,641.78 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.எதிர்வரும், நாட்களில் தென்மேற்கு பருவ மழையினால் அணையில்நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அணையின் நீர் இருப்பு மற்றும் பொதுமக்களின் தேவையினை கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமையாக பயன்பெறும் வகையில், சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கணமாக பயன்படுத்தி, அதிக
மகசூல்ஏற்படுத்திட வேண்டும்என்றார்.

இந்நிகழ்ச்சியில் முத்துக்கருப்பன்,எம்.பி., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நிர்மலன் கிறிஸ்துதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் ஞானசேகர், .மாரியப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன்,
உதவி பொறியாளர் சங்கர்ராஜ் பேட்டர்சன், உள்பட .சிவகுருநாதன், கசமுத்து, சவுந்திரராஜன், சுப்பையா, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்