முக்கிய செய்திகள்:
திமுகவை பற்றி சரத்குமார் விமர்சனம்

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கொடியேற்று விழாவில் கலந்துகொண்ட சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசும் செவி சாய்த்து வருகிறது.

தி.மு.க. தலைவர், தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். தி.மு.க.வை யாரும் அழிக்க முயற்சிக்கவில்லை. மக்களே அவர்களை ஒதுக்கி வைத்து விட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியால், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது தொடர்பாக முதல்- அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்