முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா இன்று ஸ்ரீரங்கம் பயணம்

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா காரில் புறப்படுகிறார். சென்னை விமான நிலையம் செல்லும் அவர், பின்னர் விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வருகிறார்.

மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீரங்கம் மேலச்சித்திரை வீதியில் நடைபெறும் விழாவில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைத்து விழா பேருரை ஆற்றுகிறார்.

விழா முடிவடைந்ததும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

மேலும் செய்திகள்