முக்கிய செய்திகள்:
நெல்லையில் ரயில்வே அதிகாரியை கருப்புக்கொடியுடன் முற்றுகையிட்ட ஊழியர்கள்

நெல்லை ரயில் நிலையத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக்கோரி, கருப்புக்கொடியுடன் ரயில்வே ஊழியர்கள் மதுரை கோட்ட மேலாளரை இன்று(2562014) முற்றுகையிட்டனர்.நெல்லை ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்டரயில்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள பணிமனையில் தினமும் 3க்கும் மேற்பட்ட ரயில்கள் கழுவி சுத்தம் செய்யப்படுவதோடு, பழுதுகள் நீக்கி பராமரிக்கப்படுகிறது. இப்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களின் அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றுவதில் எலக்ட்ரானிக்கல் பிரிவினர் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதைக்கண்டித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நெல்லை ரயில் நிலையத்திற்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி இன்று வந்தார். அப்போது குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கக்கோரி கருப்புக்கொடியுடன் ரயில்வேயின் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள்அவரை முற்றுகையிட்டனர்.

ஏ.ஐ.எஸ்.சி. எஸ்.டி. தொழிற்சங்க கிளைத்தலைவர்பி.செல்லையா, டி.ஆர்.இ.யூ. கிளைத் தலைவர் ராஜு, ஏ.ஐ.எல்.ஆர். எஸ்.ஏ. மண்டல நிர்வாகி நாராயணன், எஸ்.ஆர்.ஏ.யூ. தொழிற்சங்க நிர்வாகி மணி, ஏ.எல்.ஓ.பி.சி. தொழிற்சங்க நிர்வாகி பாலாஜி உள்பட பலர்கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளிக்கப்பட்டதைதொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து கூறிய ஊழியர்கள் நெல்லை ரயில் நிலையத்தில் குடிநீர்ப் பிரச்னை மட்டுமல்லாமல், தொழிலாளர் விரோதப்போக்கில் ஈடுபட்டு வரும் 2 ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ரயில்வேயில் அங்கீகாரம் பெற்ற சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு பல்வேறு இடையூறு அளித்து தங்களது சங்கத்தில் இணைக்கும்வகையில்செயல்படுகிறார்கள். தவறுகளுக்கான தண்டனைகளையும் வேறுபடுத்துகிறார்கள். மதுரை கோட்டத்தில் மட்டும் 4பேர் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊதிய உயர்வு கிடைக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள். இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

மேலும் செய்திகள்