முக்கிய செய்திகள்:
நெல்லையில் அதிமுக அரசின் சாதனைவிளக்க கூட்டம் : முத்துக்கருப்பன் எம்.பி தகவல்

அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி நெல்லை மாநகர் மாவட்டத்தில் 15 தினங்களுக்குள் 205 தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர்மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன்எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கியும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை அமோகவெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் நெல்லை மாநகர் மாவட்டத்தில் தொடர்பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டங்கள் நெல்லை, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 தொகுதிகளிலும் இன்று துவங்கி ஜூலை 11ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தினமும் 10க்கும் குறையாத தெருமுனை பிரசார கூட்டங்கள் வீதம் இரு வாரங்களில் 205 கூட்டங்கள்வரை நடக்கின்றன.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தூர் பாண்டியன், எம்.பி.க்கள் முத்துக் கருப்பன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், பிரபாகரன் மற்றும் எம்எல்ஏக்கள், மாநில பேச்சாளர்கள், ஒன்றிய, வட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டங்களில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

பேட்டியின் போது எம்.பி.க்கள் விஜிலா, வசந்தி முருகேசன், மேயர் (பொ) ஜெகந்நாதன், நெல்லை பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத் துரை, அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், மாவட்ட முன்னாள் செயலாளர் செந்தில் ஆறுமுகம், மண்டல தலை வர்கள் மோகன், எம்.சி.ராஜன், இளைஞர் பாசறை செயலாளர்ஹரிகர சிவசங்கர், மகளிரணி புவனேஸ்வரி, டால்சரவணன், ஆவின் அன்னசாமி ஆகியோர்உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்