முக்கிய செய்திகள்:
நெல்லையில்அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்

ஊதியஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்காததை கண்டித்து அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் நெல்லையில்ஆர்ப்பாட்டம்நடத்தினர்

அரசு போக்குவரத்து கழகத்தொழிலாளர்களுக்கு மட்டும்கடந்த 13 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்தும்,அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி (நேற்று) செவ்வாய்க்கிழமை மாவட்ட சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம்
சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் போக்குவரத்துத் கழக தலைமை அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். மாவட்ட சிஐடியூ தலைவர் ராஜாங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பின் பொதுச்செயலர் பெருமாள், துணைப்பொதுச்செயலாளர்கள் மணி, காமராஜ், போக்குவரத்துக் கழக
சம்மேளன குழு உறுப்பினர்கள் ஹரிகுமார், ஜோதி, துணைத்தலைவர்கள் மரியஜான், சிவதாணுதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். சம்மேளன மாநில துணைப்பொதுச்செயலாளர்காளிப்பன்போராட்டத்தை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்