முக்கிய செய்திகள்:
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனே உத்தரவிடவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியருப்பதாவது:-

நான் கடந்த 3-ம் தேதி தங்களை சந்தித்து அளித்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்கவேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். நமது உரையாடலின்போதும் இதனை வலியுறுத்தினேன்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமில்லை என மத்திய மந்திரிகள் அனந்தகுமார், வெங்கையா நாயுடு ஆகியோர் பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி அப்படி எதுவும் பேசவில்லை என நான் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில் கர்நாடக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகம் தவறான தகவலை அளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என நீர்வளத்துறை மந்திரி கூறியுள்ளார். மந்திரியின் இந்த பேச்சால் தமிழக மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது

காவிர் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது ஒரு பகுதி. இந்த தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அந்த தீர்ப்பு வெறும் காகிதமாகிவிடும். அரசியல் காரணங்களுக்காக கடந்த அரசு கடைசி வரை மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க உடனடியாக உத்தரவிட வேண்டும். இதன்மூலம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்தினால் தமிழக விவசாயிகளின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்