முக்கிய செய்திகள்:
மாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக நவநீதகிருஷ்ணன் : ஜெயலலிதா அறிவிப்பு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர், திரு. A. நவநீதகிருஷ்ணனை அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் திரு. A. நவநீதகிருஷ்ணன் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்