முக்கிய செய்திகள்:
புதிய மேம்பாலம், பாலங்களை திறந்து வைத்தார் ஜெயலலிதா

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் 191 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலங்கள், பாலங்கள், வெளிவட்டச் சாலை, அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவள்ளூர் மாவட்டம், பட்டரவாக்கத்தில் 36 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.5-ல் 760 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொளி காட்சி மூலமாகத் திறயது வைத்தார். இந்த சாலை மேம்பாலம் திறக்கப்படுவதால் பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, கருக்கு கிராமம், பானு நகர், புத்தூர், கள்ளிக் குப்பம், சண்முகாபுரம், சூரப்பட்டு, புழல் மற்றும் செங்குன்றம் பகுதிகளைச் சார்யத பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக பயணம் செய்ய வழிவகை ஏற்படும்.

மேலும், சென்னை, ஜி.எஸ்.டி சாலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை; ஜி.எஸ்.டி சாலை MEPZ; உள்வட்ட சாலை எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி சந்திப்பு; தரமணி இணைப்புச் சாலையில் உள்ள TCS மற்றும் பெருங்குடி சயதிப்பு ஆகிய ஐயது இடங்களில் 30 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படிகள், இயங்குபடி, சாய்தள நடைபாதை சி.சி.டி.வி, போதுமான விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 31 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.1-க்கு மாற்றாக சாலை மேம்பாலம்;

விழுப்புரம் மாவட்டம், இளையாண்டிப்பட்டில் 9 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்; ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி - கோவில்புதுhரில் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய குறுகிய தாம்போகிக்கு பதிலாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்; திண்டுக்கல் மாவட்டம், ராமநாதபுரத்தில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம்; திருச்சி மாவட்டம், வடமலைப்பட்டியில் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தஞ்சாவூர் மாவட்டம், நெய்வாசலில் 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; பழமார்நேரியில் 19 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; சிறுநிலாவில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

கடலூர் மாவட்டம், முருகன்குடியில் 7 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலம்; நாகப்பட்டினம் மாவட்டம், தென்பாதியில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருவாரூர் மாவட்டம், முடிகொண்டானில் 3 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தேனி மாவட்டம், போடியில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; புதுக்கோட்டை மாவட்டம், நடுப்பட்டியில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; வெள்ளனூரில் 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம்; சிவகங்கை மாவட்டம், அனுமயதங்குடியில் 4 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; மணக்குடியில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்;

மதுரை மாவட்டம், சேடப்பட்டியில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம்; பரவையில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண்.356-க்கு பதிலாக கட்டப்பட்டுள்ள கீழ்பாலம் ;
ராமநாதபுரம் மாவட்டம், அ.பனையூரில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; மூக்கையூரில் 4 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருநெல்வேலி மாவட்டம், அப்பர்குளத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பச்சையார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்; திருப்பூர் மாவட்டம், உரல்பட்டியில் 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்; ஈரோடு நகருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வெளிவட்டச்சாலை என 152 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 புதிய பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 5 நடைமேம்பாலங்கள் மற்றும் ஒரு வெளிவட்டச் சாலை;

காஞ்சிபுரம் மாவட்டம், வேளச்சேரியில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகம்; கரூர் மாவட்டம், குளித்தலையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குளித்தலை, தரக்கட்டுப்பாடு அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடம்; தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரத்தநாடு உட்கோட்ட அலுவலகம்; நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை உட்கோட்ட அலுவலகம்; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை;

மதுரை மாவட்டம், மதுரை வடக்கில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகக் கட்டடம்; 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைக் கோட்ட அலுவலகம் மற்றும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை என 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 2 பயணியர் மாளிகைகள் என ஆக மொத்தம் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் 191 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மேம்பாலங்கள், பாலங்கள், வெளிவட்டச் சாலை, அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தங்களது பணியினை விரைந்து மேற்கொள்ளும் வகையில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 41 ஜீப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்