Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
சாந்தன், பேரறிவாளன், முருகன் விடுதலையானது மகிழ்ச்சி: கருணாநிதி கருத்து - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
சாந்தன், பேரறிவாளன், முருகன் விடுதலையானது மகிழ்ச்சி: கருணாநிதி கருத்து

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,

“டெசோ” கூட்டங்களின் வாயிலாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறு கடிதங்களின் வாயிலாகவும் விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக்கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒரு வெற்றியாக உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்தபோது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையிலும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலியபெருமாள், நளினி ஆகியோரைப் போல இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சிறப்பான தீர்ப்பினைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடியாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அவர்கள் விடுதலை அடைவார்களேயானால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

மேலும் செய்திகள்