Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
தொலைபேசி எண் ‘104’ மருத்துவ சேவையினை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
தொலைபேசி எண் ‘104’ மருத்துவ சேவையினை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.

இதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை கொடநாடு முகாமில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று 2.11.2012 அன்று சட்ட மன்றப் பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.

அதன்படி, கிராம சுகாதார செவிலியர்களுக்கு 19 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9,397 விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதன் அடையாளமாக 7 கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவப் பணிகள் இயக்குநர் டாக்டர் சந்திரநாதன், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்