முக்கிய செய்திகள்:
இலங்கையின் வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைப்பது நாட்டிற்க்கு ஆபத்து, கோத்தபய ராஜபட்ச.
கொழும்பு: தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு ராணுவத்தினரை குறைப்பது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து என இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபட்ச கூறினார், இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபட்சவுக்கு ஆதரவு கோரி, தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது, இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் காரணமாக இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக யாரும் நினைத்தால் அது தவறு, போரின்போது இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள், வெளிநாடுகளில் இன்னும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி, பயங்கரவாதச் செயல்கள் மூலம் இலங்கையை 1980-களின் இருண்ட காலத்துக்கு இட்டுச் செல்வதற்கான அபாயத்தை மறுப்பதிற்கில்லை, மிகக் கடுமையான முயற்சிகள் மூலமாகவே, தேசப் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து வருகிறோம், எனவே, ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் வடக்கு மாகாணத்தில் ராணுவக் குறைப்பில் ஈடுபட முயற்சி செய்தால் அது மிகப் பெரிய தவறாகும் என்றார் கோத்தபய ராஜபட்ச.
மேலும் செய்திகள்