முக்கிய செய்திகள்:
இலங்கையில் தமிழ் வாக்காளர்களை தேர்தலில் பங்கு கொள்ள முடியாதபடி தடுக்க ராணுவம் முயற்சி - எதிர்கட்சிகள் புகார்.
கொழும்பு: இலங்கையில் தமிழ் வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்காதபடி, ராணுவத்தைக் கொண்டு அந்நாட்டு அரசு மிரட்டுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர், இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறியதாவது, அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ் வாக்காளர்களை பங்கேற்காதபடி செய்யவும், தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும், யாழ்ப்பாணம், பொலனருவா உள்ளிட்ட இடங்களுக்கு 2,000-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரை ராஜபட்ச அரசு அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன, இதுகுறித்து தேர்தல் ஆணையருக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்த தேர்தல் பார்வையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீசேனா தெரிவித்தார், மைத்ரிபாலா ஸ்ரீசேனாவின் ஆதரவாளரும் இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், ராணுவத்தினருடன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் முட்டாள்தனமாக எதையும் செய்யக்கூடாது என்று அவர்களை வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.
மேலும் செய்திகள்