முக்கிய செய்திகள்:
இந்திய, ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஆஸி,. பிரதமர் தேநீர் விருந்து.
சிட்னி : ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது சிட்னி இல்லத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புத்தாண்டு தினமான இன்று தேநீர் விருந்து அளித்தார், இரு அணி வீரர்களும் பிறகு பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் டீம் இந்தியா டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் இந்திய வீரர்கள் சாதாரண உடையில் பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது, அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் சேர்ந்து டோனி அபாட் புகைப்படம் எடுத்துக் கொண்டார் , இந்தப் புகைப்படங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்