முக்கிய செய்திகள்:
`கூடங்குளம் அணுமின் நிலையத் தில் வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத் தில் வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 மெகாவாட் ஆந்திர மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது’ என அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு, கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் முதலாவது உலையில் பழுது பார்ப்புப் பணிக்குப் பிறகு, டிசம்பர் 7-ம் தேதி மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. 10-ம் தேதி ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி எட்டப்பட்டு தொடர்ந்து இதேநிலையில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 335 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, வணிகரீதியிலான மின் உற் பத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி நடை பெற்று வருகிறது. உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட் பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது. மத்திய மின்சார ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்துக்கு 562.50 மெகாவாட், புதுச்சேரிக்கு 33.50, கேரளத்துக்கு 133, கர்நாடகத்துக்கு 221, ஆந்திரத்துக்கு 50 மெகாவாட் என பகிர்ந்தளிக்கப்படுகிறது. முதலா வது அணுஉலையின் டர்பைன் ஜெனரேட்டர் இதுவரை 5,266 மணிநேரம் இயங்கியிருக்கிறது’ என்றார்.
மேலும் செய்திகள்