முக்கிய செய்திகள்:
புறநகர் பயணிகள் ரயில் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்த நிபுணர் குழு பரிந்துரை.
புது தில்லி: ரயில்வே திட்டங்களை அமலாக்க ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மேலும், அவற்றுக்கு வங்கிகளிலிருந்து தேவையான நிதியைப் பெறவும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நிதிச்சேவை செயலர் டி.கே. மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, தனது அறிக்கையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது, புறநகர் பயணிகள் ரயில் கட்டணத்தை கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்க வேண்டும். பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச கட்டணத்துக்கான பயண தூரத்தை 10-லிருந்து 20 கிலோமீட்டராகவும், தொலைதூர, விரைவு ரயில்களில் குறைந்தபட்ச பயண தூரத்தை 50 கிலோமீட்டரிலிருந்து 100 கிலோமீட்டராகவும் உயர்த்த வேண்டும் தற்போது சாலைப் போக்குவரத்துக் கட்டணத்தை விட ரயில் போக்குவரத்துக் கட்டணம் 60 சதவீதம் குறைவாக உள்ளது. எனவே, ரயில் கட்டணத்தை படிப்படியாக உயர்த்த வேண்டியது அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்