முக்கிய செய்திகள்:
இலங்கை, போர்க் குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் ஐ நா சபை வேண்டுகோள்.
நியூயார்க்: இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கையை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது, இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது, போருக்குப் பிந்தைய வாக்குறுதிகளையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் இலங்கை அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், மேலும், இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து நடுநிலையான விசாரணை மேற்கொள்வதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அழைப்பை ஏற்று, சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார் என்றார் அவர், தற்போது அதிபர் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையில், தற்போதைய அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா ஆகிய இருவருமே சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகள்