முக்கிய செய்திகள்:
சென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் இடையே பிரீமியம் சிறப்பு ரயில்.
சென்னை: சென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் இடையே பிரீமியம் சிறப்பு ரயில், பெங்களூரு கண்டோன்மென்ட் - விழுப்புரம் இடையே ஜனசாதாரண முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, இது குறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது செகந்திராபாத் - சென்னை சென்ட்ரல் பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரயில் எண் 02760: டிசம்பர் 28 ஆம் தேதி செகந்திராபாதில் இருந்து இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில் எண் 02759: டிசம்பர் 29 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில் விஜயவாடா, நெல்லூர், சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, கம்மம், வாரங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் பெங்களூரு கண்டோன்மென்ட் - விழுப்புரம் ஜனசாதாரண முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்: ரயில் எண் 06533: டிசம்பர் 27, ஜனவரி 1 ஆம் தேதி பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் ரயில் எண் 06534: டிசம்பர் 28, ஜனவரி 3 ஆம் தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தடையும், இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் செய்திகள்