முக்கிய செய்திகள்:
சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் முதலிடம் பிடித்துள்ளார்.
புது தில்லி: ஜோர்னல் நேச்சர் என்ற வார இதழ் நடத்திய ஆய்வின்படி, 2014ஆம் ஆண்டின் தலை சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்தியா விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ராதாகிருஷ்ணன் முதலிடம் பிடித்துள்ளார், மிகவும் எளிமையானவராகவும், நேர்மையானவராகவும் இருப்பதால் ராதாகிருஷ்ணன் இந்த இடத்தைப் பிடித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியதன் மூலம், உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மிக முக்கிய இடத்தை வகித்துள்ளது, இதற்கு காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஜோர்னல் நேச்சர் இதுவரை வெளியிட்ட பட்டியலில், இந்திய விஞ்ஞானி ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் செய்திகள்