முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும், பா ஜ க தலைவர் அமித் ஷா பேச்சு.
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார், சென்னையை அடுத்த மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 6 மாத கால பாஜக ஆட்சியில் என்ன சாதித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார், 6 மாதங்களில் என்ன செய்தோம் என்பதைச் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால், 60 ஆண்டு கால நேரு குடும்ப ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும், கடந்த 6 மாத கால நரேந்திர மோடி ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் விளைவாக பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது, ராகுல் காந்தி பிறந்தது முதல் வெள்ளிக் கரண்டியில் பால் அருந்தியவர். ஆனால், பிரதமர் மோடி தேநீர் விற்றவர். அதனால் அவருக்கு விலைவாசி உயர்வின் துயரம் புரியும், கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒருமுறை கூட பெட்ரோல், டீசல் விலை குறைந்ததில்லை. ஆனால், கடந்த 6 மாதங்களில் 10 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.1,000 மிச்சமாகியுள்ளது, காங்கிரஸ் ஆட்சியிலும் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இப்போதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது என ராகுல் பேசியுள்ளார். உண்மைதான். காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவம் மட்டுமே துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொண்டிருந்தது. இப்போது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டால், அதற்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தின் பீரங்கிக் குண்டு பாய்கிறது. இந்த வித்தியாசம் ராகுல் காந்திக்குப் புரியாது., வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்காக "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை தொடங்கியுள்ளோம், இதன் மூலம் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதனால், கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும், 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம், 10 ஆண்டுகளில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசில் சுமார் ரூ.12.5 லட்சம் கோடி மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தேர்தலில் மக்களைச் சந்திக்கும்போது மோடி ஆட்சியின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இருக்காது என உறுதி கூறுகிறேன், மோடி ஆட்சியில் பல மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. விரைவாக முடிவெடுக்க "டீம் இந்தியா' என்பதை பிரதமர் வலியுறுத்தி வருகிறார், மத்திய அரசு மட்டும் முடிவெடுக்காமல், மாநில முதல்வர்களுக்கும் பங்களிப்பு இருக்கும் வகையில் திட்டக் குழுவுக்கு பதில் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது, கடந்த 6 மாதகால மோடி ஆட்சியின் நிர்வாகத் திறமையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 40 சதவீத குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. ஆனால், கடந்த 6 மாதங்களில் 8 கோடி பேருக்கு புதிதாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, பாஜக மிகப்பெரிய ஜனநாயகக் கட்சி. வாரிசு அரசியலுக்கு இங்கு இடமில்லை சாதாரணமானவர்கள் உயர் பொறுப்புகளுக்கு வரமுடியும் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, அஸ்ஸாம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லை இந்த நிலையை மாற்றினால்தான் மத்தியில் நீண்ட காலத்துக்கு ஆட்சியில் இருக்க முடியும், தமிழகத்திலும் பாஜக வலுவாக இல்லை, தமிழகத்தில் சுமார் 60 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன, ஒரு மையத்துக்கு 100 உறுப்பினர்கள் வீதம் 60 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இந்தப் பணியில் தமிழக பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும், தமிழகத்தை திமுக, அதிமுக என இரண்டு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன, இதற்கு முடிவு கட்ட வேண்டுமானால் பாஜகவை பலம் பொருந்திய கட்சியாக மாற்றவேண்டும் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தால், இது சாத்தியமாகும், தமிழக பாஜக தொண்டர்கள் அனைவரும் மோடியின் தூதுவர்களாக இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பாஜக ஆட்சியை ஏற்படுத்த முடியும், இலங்கை முதல் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் கெளரவமாக இருக்க வேண்டும் தமிழ், தமிழர், தமிழகத்தின் கெளரவம் காக்கப்பட வேண்டுமானால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்றார் அமித் ஷா.
மேலும் செய்திகள்