முக்கிய செய்திகள்:
நாடாளுமன்றக் நிலைக்குழுவில் மன்மோகன் சிங்

நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளார். இவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிதிக்குழுவில் உள்ளார். நிலைக்குழுவில் இடம்பெறும் முதல் முன்னாள் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் உள்ள 24 நிலைக்குழுக்களில் 5 குழுக்களுக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தலைமைப் பதவி வழங்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவிற்கு இளம் பா.ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூர் தலைமை வகிப்பார்.

வெளியுறவுத்துறைக்கான நிலைக்குழுவிற்கு சசி தரூர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரேணுகா, ஜெயா பச்சன், ஹேம மாலினி, சச்சின், வருண் காந்தி, டெரிக் ஓ பிரையன் ஆகியோரும் நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எந்த கமிட்டியிலும் இடம்பெறவில்லை.

மேலும் செய்திகள்