முக்கிய செய்திகள்:
எனது குடும்பம் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை: நீதிபதி சதாசிவம்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான பி. சதாசிவம் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவரை கவர்னராக நியமிக்கக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள சதாசிவம், தனது குடும்பத்தினர் ஒரு போதும் முறைட்டில் ஈடுபடவில்லை என்று கூறினார். 98 சென்ட் நிலம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எவ்வித சலுகைகளையும் தானோ, தனது குடும்பத்தாரோ பெறவில்லை என தெரிவித்த சதாசிவம் மாருதி நிறுவனத்திடம் இருந்து தனது மகன் சலுகைகள் பெற்றதாக கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.

மாருதியின் டீலர்ஷிப்பிற்காக செலுத்தவேண்டிய 5 கோடி ருபாயை செலுத்தாமலேயே சலுகையாக தனது மகனுக்கு அந்த டீலர்ஷிப் வழங்கப்பட்டதாக கூறுவதை அவர் மறுத்துள்ளார். குறிப்பிட்ட டீலர்ஷிப்பிற்காக மற்றவர்களை போலவே தனது மகன் விண்ணப்பம் அளித்ததாகவும், அவருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் சதாசிவம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்